பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...
அல்லது...
என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...
இல்லையெனில்...
எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்...
அதுவும் இல்லையெனில்...
கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...
இவையெதுவும் இல்லையெனில்...
நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....
எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...
ஒரு முறையேனும்
உனக்கு சொல்ல நினைத்து
சொல்லாத பதில்...
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................
Saturday, March 27, 2010
Thursday, March 25, 2010
ஒரு தலைகாதலின் வேதனை
உன் அன்புக்காகவும் காதலுக்காகவும் எங்கும் ஒரு ஜீவன் நான். உன் கண்ணில் படுவதற்காக நான் அதிக முயற்சி எடுக்கிறேன். உன் கவனத்தை என்பால் ஈர்ப்பதற்காக நான் அதிக சிரம படுகிறேன். உன் பார்வை என் மீது படுவதற்காக நான் தவம் இருக்கிறேன். என் உணர்வுகளையும் காதல் வலியினையும் உன் மேல் நான் கொண்ட அன்பையும் உன்னிடம் சொல்வதற்கு துடிக்கிறேன்.
ஆனால் நீயோ என்னை பார்ப்பதையே தவிர்க்கிறாய். என்னை கண்டதும் உன் முகத்தை திருப்பி கொள்கிறாய். என் பார்வை உன் மீது படும் போது புழுவை போல துடிக்கிறாய்.
என் பார்வை உன் மீது பல முறை விழுந்திருக்கிறது. ஆனால் உன் கண்கள் ஒரு முறை கூட என்னை காண மறுக்கிறது. காரணம் என்ன கண்ணே. என்னை காண மனம் இல்லையா. இல்லை உனக்கு மனமே இல்லையா?
என் பார்வை உன் மீது பல முறை விழுந்திருக்கிறது. ஆனால் உன் கண்கள் ஒரு முறை கூட என்னை காண மறுக்கிறது. காரணம் என்ன கண்ணே. என்னை காண மனம் இல்லையா. இல்லை உனக்கு மனமே இல்லையா?
விடிகிற பொழுது ஒவ்வொன்றும் உன்னை காணத்தான் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் நீ என்னை பார்க்க மறுப்பதால் அடுத்த விடியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். காதல் எல்லோரையும் கவிஞனாக்கும். ஆனால் உன் மீது நான் கொண்ட காதல் என்னை பித்தனாக்கியது. தினமும் ஒரு முறையாவது உன்னை காணவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஆனால் வாழ்நாளில் ஒரு முறைகூட என்னை காணவேண்டாம் என்பதுதான் உன் எண்ணமா ?
காதல் வேண்டாம் என்று நீ நினைக்கலாம். ஆனால் உன்னை காண்பது ஒன்றே போதும் என்று நான் நினைக்கின்றேன். நான் உன் எதிரில் வருவதை நீ விரும்பாமல் இருக்கலாம்
ஆனால் நீ என் கனவில் வரமாட்டாயா என்று நான் ஏங்குகிறேன். என் நிஜத்தை நீ தவிர்க்க
நினைக்கலாம். ஆனால் உன் நிழலையாவது காண முடியுமா என்று தவிக்கிறேன்.
உன்னால் பசி மறந்தேன் உறக்கம் மறந்தேன் உன்னை தவிர எல்லாம் மறந்தேன். ஆனால் நீ என்னை மறந்து விட்டாய். தவறாக கூறி விட்டேன். நீ என்னை மறக்கவில்லை. நினைத்தால் தானே மறக்க முடியும். நீ என்னை நினைக்கவே இல்லை. பிறகு எப்படி மறக்க முடியும்
நினைக்க மனமில்லாத உனக்கு உன்னை மறக்க முடியாத என் இதயத்தின் வலி எப்படி தெரியும்.
உன்னை ஏன் நான் நினைக்க வேண்டும். உன்னை நினைத்து நான் ஏன் உருக வேண்டும் என்று என் மனம் கேட்கிறது. ஆனால் என் மனம் என்னிடம் இல்லை அது உன்னிடம் தன் இருக்கிறது என்று நான் உணரவில்லை. என்னிடம் இல்லாத என் மனதிடம் நான் கேள்வி கேட்டு என்ன பயன். மனமே நீதான் என்கிற பொழுது நான் என்ன கேள்வி கேட்பது உன்னிடம் ?
ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற அனைத்து குணங்களும் உன்னிடம் இருக்கிறது. ஆனால் காதல் மட்டும் இல்லாமல் போனது ஏன் ? காதல் பிடிக்கவில்லையா ? இல்லை என்னை பிடிக்கவில்லையா ? காதலிக்க மனம் இல்லையா ?அல்லது உன் மனதில் காதலே இல்லையா? இல்லை உன்னை காதலிக்கும் என் மனம் புரியவில்லையா ?
காதல் புரியாத உனக்கு உன்னை காதலிக்கும் என் மனதின் வேதனை எப்படி புரியும். நீ என்னையும் புரிந்து கொள்ள வேண்டாம் என் காதலின் வேதனையும் புரிந்து கொள்ள வேண்டாம். ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும். இந்த உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கலாம் .ஆனால் நீ மட்டும்தான் என்னுடைய உலகம்.
என் மனதில் உள்ளதை உன்னிடம் மறைக்காமல் சொல்லி விட்டேன். ஆனால் உன் மனதை மட்டும் நீ மறைத்து விடுகிறாய். எத்தனை காலம்தான் நீ மறைப்பாய். நீ எத்தனை காலங்கள் மறைத்தாலும் அதுவரை என் காதலும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். உன் மனம் திறக்கும்வரை என் உயிர் உன்னை நினைத்து கொண்டிருக்கும். உன் காதல் கிடைக்கும் வரை என் நிழல் உன்னை தொடர்ந்து கொண்டிருக்கும்.
Monday, March 1, 2010
காதல் திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் ......
| திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! |
Subscribe to:
Comments (Atom)